உர நிறுவனத்தில் வேலை

உரம் மற்றும் ரசாயன நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெயினி பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

Update: 2018-02-05 08:18 GMT
தேசிய உரத்துறை நிறுவனம் சுருக்கமாக என்.எப்.எல். என அழைக்கப்படுகிறது. இதன் கீழ் செயல்படும் ராமகுண்டம் உரம் மற்றும் ரசாயன நிறுவனத்தில் (ஆர்.எப்.சி.எல்.) தற்போது மேனேஜ்மென்ட் டிரெயினி பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 61 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 27 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

கெமிக்கல் என்ஜினீயரிங் அல்லது தொழில்நுட்ப இளநிலை பட்டப்படிப்பு, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவில் என்ஜினீயரிங் தொழில்நுட்ப பட்டப்படிப்பு படித்தவர்கள விண்ணப்பிக்கலாம். இவர்கள் கேட் 2016 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ரூ.700 கட்டணம் செலுத்தி, இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 9-2-2018-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.nationalfertilizers.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்