மத்திய அரசு அதிகாரி வேலை

யூ.பி.எஸ்.சி.,பல்வேறு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Update: 2018-02-05 08:11 GMT
த்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூ.பி.எஸ்.சி., காலியாக உள்ள பல்வேறு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அசிஸ்டன்ட் கமிஷனர், ஏரோனாட்டிகல் ஆபீசர், சயின்டிஸ்ட் (மெக்கானிக்கல்), ஜூனியர் சயின்டிபிக் ஆபீசர் (எக்ஸ்புளோசிப்), அசிஸ்டன்ட் கெமிஸ்ட் போன்ற பணிகளுக்கு மொத்தம் 28 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அக்ரிகல்சரல் எக்கனாமிக், அக்ரி எக்ஸ்டென்சன், அக்ரோனாமி, என்டமாலஜி, நெமடாலஜி ஜெனிடிக், பிளான்ட் பிரீடிங், அக்ரிகல்சர் பாட்டனி, பிளான்ட் பயோடெக்னாலஜி, பிளான்ட் பாதாலஜி, பிளான்ட் பிசியாலஜி, சீடு சயின்ஸ் மற்றும் பி.இ., பி.டெக் படித்தவர் களுக்கு வாய்ப்பு உள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் முழுமையாக படித்து அறிந்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 15-2-2018-ந் தேதியாகும்.

மேலும் செய்திகள்