தமிழக வேலை வாய்ப்புகள்
டி.என்.பி.எஸ்.சி. அமைப்பு தொழிலாளர் நலத்துறையில் உதவி கமிஷனர் பணியிடங்களை நிரப்பவும் விண்ணப்பம் கோரி உள்ளது.
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., தடய அறிவியல் துணை சேவை துறையில் ஆய்வக உதவியாளர் (லேப் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 56 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு 1-7-2018-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.
விண்ணப்பதாரர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் போன்ற அறிவியல் பாடங்களை உள்ளடக்கிய பிரிவில் பிளஸ்-2 படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மூலம் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 21-2-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
டி.என்.பி.எஸ்.சி. அமைப்பு மற்றொரு அறிவிப்பில் தொழிலாளர் நலத்துறையில் உதவி கமிஷனர் (தொழிலாளர்) பணியிடங்களை நிரப்பவும் விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிகளுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.
முதுநிலை பட்டப்படிப்புடன், லேபர் மேனேஜ்மென்ட் படித்தவர்களுக்கும், லேபர் அட்மின், சோசியல் ஒர்க், சோசியல் சயின்ஸ், லேபர் ரிலேசன்ஸ், சோசியல் வெல்பேர், லேபர்லா போன்ற பிரிவில் பட்டப்படிப்பு, டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, 11-2-2018-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கவும், இவை பற்றிய விரிவான விவரங்களை அறியவும் www.tnpsc.gov.in/ www.tnpscex-ams.net/ www.tnpscexams.in ஆகிய இணையதள பக்கங்களைப் பார்க்கலாம்.