ரூ.25 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி, மேலாளருக்கு 4 ஆண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு
ரூ.25 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி, மேலாளருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி மும்பை கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
மும்பை,

ரூ.25 லட்சம் மோசடி
மும்பையை சேர்ந்தவர் திவேஷ் குமார். வைர வியாபாரி. இவரது அலுவலகம் வால்கேஸ்வரில் உள்ளது. இவரிடம் கடந்த 2002-ம் ஆண்டு மற்றொரு வைர வியாபாரியான சைலேஷ் ரூ.25 லட்சம் மதிப்பிலான வைரங்களை வாங்கினார். ஆனால் வைரத்திற்கான பணத்தை சைலேஷ் கொடுக்கவில்லை.
இது குறித்து திவேஷ் குமார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இந்த புகார் குறித்து சைலேஷ் மற்றும் அவரது மேலாளர் தர்மேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
4 ஆண்டு ஜெயில்
இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையில், 2 பேரும் ரூ.25 லட்சம் மோசடியில் ஈடுபட்டது உறுதியானது.
இதையடுத்து வழக்கை விசாரித்த கோர்ட்டு, வைர வியாபாரி சைலேஷ் மற்றும் அவரது மேலாளர் தர்மேசுக்கு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறியது.