உடுப்பி மாவட்டம் கொல்லூரில் திருமணத்திற்கு பெற்றோர் வற்புறுத்தியதால் தூக்குப்போட்டு போலீஸ்காரர் தற்கொலை
உடுப்பி மாவட்டம் கொல்லூரில் திருமணத்திற்கு பெற்றோர் வற்புறுத்தியதால் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மங்களூரு,

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
போலீஸ்காரர்
உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா கொல்லூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் நாகராஜ்(வயது 27). இவரது சொந்த ஊர் தாவணகெரே மாவட்டம் மாலே பென்னூர் கிராமம் ஆகும். இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் கொல்லூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவர் வேலைக்கு சென்று வருவதற்கு வசதியாக கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சொந்தமான விடுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தார். இவருடன் சக போலீஸ்காரர் சந்தீப் என்பவரும் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நாகராஜ் தனது சொந்த ஊருக்கு சென்றார். நேற்று முன்தினம் காலையில் வீடு திரும்பினார். இதையடுத்து அவர் பணிக்கு செல்லாமல் விடுப்பு எடுத்துக் கொண்டு அறையிலேயே படுத்திருந்தார்.
தூக்கில் பிணமாக தொங்கினார்
அவருடன் தங்கியிருந்த சக போலீஸ்காரர் சந்தீப், பாதுகாப்பு பணிக்காக கங்குலி பகுதிக்கு சென்றார். அங்கு பணி முடிந்து நேற்று காலையில் அறைக்கு திரும்பினார். அப்போது அறை உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து சந்தீப் அறைக்கதவை பலமுறை தட்டினார். ஆனால் நீண்ட நேரமாகியும் நாகராஜ் கதவை திறக்கவில்லை.
இதனால் பதற்றம் அடைந்த சந்தீப் ஜன்னல் கண்ணாடியை உடைத்து அறைக்குள் பார்த்தார். அப்போது அங்கு நாகராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்தீப் உடனே இதுபற்றி கொல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
திருமணத்தில் விருப்பம் இல்லாததால்...
பின்னர் போலீஸ்காரர் நாகராஜின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் நாகராஜ் தனது சொந்த ஊருக்கு சென்றிருந்தபோது அவருக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், ஆனால் அவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து தன்னுடைய பெற்றோருடன் சண்டை போட்டுவிட்டு கொல்லூருக்கு திரும்பியதும் தெரியவந்தது. மேலும் அவருடைய பெற்றோர், தொடர்ந்து அவரை திருமணத்திற்கு வற்புறுத்தியதும், அதனால் அவர் மனமுடைந்து இருந்ததும் தெரியவந்தது.
இதன் காரணமாக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் போலீசாரின் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து போலீசார், நாகராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ்காரர் ஒருவர் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.