ஓடும் ரெயிலில் கேரள பெண்ணிடம் சில்மிஷம் ராணுவ வீரர் கைது
சேலம் அருகே ஓடும் ரெயிலில் கேரள பெண்ணிடம் சில்மிஷம் செய்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
சூரமங்கலம்,
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு மங்களூருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரெயில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு வந்தடைந்தது. அப்போது ரெயிலில் குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்த கேரள பெண் ஒருவர் சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் மனு ஒன்று கொடுத்தார்.
அதில், ‘தான் இருந்த ரெயில் பெட்டியில் பயணம் செய்த ஆண் ஒருவர் வரும் வழியில் என்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறி இருந்தார். இதையடுத்து அவருடைய புகாரின் பேரில், போலீசார் அங்கு சென்று அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
ராணுவ வீரர் கைது
இதில், அவர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சாஜி (வயது 40) என்பதும், விசாகப்பட்டணத்தில் ராணுவ வீரராக பணியாறி வரும் அவர் விடுமுறையில் ஊருக்கு சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக சாஜியை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.