கார் மோதி விவசாயி பலி பிணத்துடன் உறவினர்கள் சாலைமறியல்
செங்கம் அருகே கார் மோதி விவசாயி பலியானார். இதையடுத்து பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்கம்,
செங்கம் அருகே பழையகுயிலம் கிராமத்தை சேர்ந்த ராஜா (வயது 38), விவசாயி. இவர் புதுப்பாளையம் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
முன்னூர்மங்கலம் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது செங்கம் நோக்கி வந்த கார் ஒன்று திடீரென ராஜா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுப்பாளையம் போலீசார் ராஜாவின் உடலை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து ராஜாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ராஜாவின் உறவினர்கள் மருத்துவமனை அருகில் உள்ள செங்கம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்திய காரை கண்டு பிடிக்கக்கோரி பிணத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.