‘‘தி.மு.க. கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்’’ திருநாவுக்கரசர் பேட்டி
‘‘சென்னையில் நாளை தி.மு.க. கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்‘‘ என்று திருநாவுக்கரசர் கூறினார்.
நெல்லை,
நெல்லையில் நேற்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
தமிழக மாணவர்களை பெரிதும் பாதிக்க கூடிய ‘நீட்‘ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பஸ் கட்டண உயர்வு தொடர்பாக சென்னையில் தி.மு.க. நாளை (செவ்வாய்க்கிழமை) கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும். காங்கிரஸ் கட்சி சார்பில் நானும் (திருநாவுக்கரசர்) மற்றும் பிற கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளோம்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எந்த நலத்திட்டங்களும் இல்லை. புதிய ரெயில்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்தபோது மத்திய அரசு கொண்டு வந்த மக்கள் விரோத திட்டங்களை கடுமையாக எதிர்த்தார். ஆனால், இன்று ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களைகூட முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரித்து வருகிறார். மத்தியில் உள்ள மதவாத அரசுக்கு ஒத்து போகும் ஊழல் அரசாக தமிழக அரசு உள்ளது.
தமிழகத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்பட அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. சதவீதம் போட்டு பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் எந்த பணியும் முறையாக நடக்கவில்லை.
அ.தி.மு.க. சார்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் நிலை உள்ளது. இந்த பிரச்சினையில் ஐகோர்ட்டு சரியான தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். 18 பேர் பதவியை நீக்கியது செல்லாது என்று தீர்ப்பு வந்தால் தமிழக ஆட்சி கலையும். அதன்பிறகு தேர்தல் நடைபெறும். தமிழக மக்களும் தேர்தலையை எதிர்பார்த்து உள்ளார்கள்.
மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு எதிராக துணை சபாநாயகர் தம்பிதுரையும், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் எம்.பி.யும். குரல் கொடுத்து உள்ளார்கள். அவர்கள் தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் குறித்து முன்கூட்டியே மத்திய அரசிடம் வலியுறுத்தி இருக்க வேண்டும். அது நிறைவேறாத பட்சத்தில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மத்திய அரசை அவர்கள் எதிர்த்து பேசி இருப்பதை பார்க்கும் போது முன்கூட்டியே தேர்தல் நடத்துவதை தெரிந்து விட்டார்களா? என்று கேட்கிறீர்கள், அது சரியாகத்தான் இருக்கும் என்றே தெரிகிறது.
இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தேர்தலை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டில் சட்டசபைக்கும் சேர்த்து தேர்தல் நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்த தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட்டில் 5 ஆண்டு திட்டம் போல் அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு உள்ளனர்.
கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சி நடந்தாலும் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக கட்சி ரீதியாக பேசி தீர்வு காணமுடியாது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை அந்தந்த மாநிலங்கள் வழங்க வேண்டும்.
ஜனநாயக நாட்டில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். ஆனால் அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? என்பதை பார்க்க வேண்டும்.
நாங்கள் தற்போது தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ளோம். அதனால் வேறு கட்சிகளுடன் கூட்டணி சேருவது பற்றி பேசுவதற்கு இல்லை.
இவ்வாறு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு கூறினார்.
பேட்டியின்போது முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், நெல்லை மாவட்ட தலைவர்கள் சங்கரபாண்டியன் (மாநகர மாவட்டம்), எஸ்.கே.எம்.சிவகுமார் (கிழக்கு), பழனிநாடார் (மேற்கு) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையடுத்து திருநாவுக்கரசர் நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில் மற்றும் ஏர்வாடியில் நடந்த கட்சி நிர்வாகிகளின் இல்ல திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பிற்பகலில் அவர் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
இதற்கிடையே, திருநாவுக்கரசருக்கு கருப்பு கொடி காட்டுவதற்கு ஒரு தரப்பினர் திரண்டனர். குறுக்குத்துறை கோவில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற திருநாவுக்கரசர் மேலப்பாளையம் வழியாக ஏர்வாடி செல்வார் என்று மாவட்ட பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமையில் சிலர் மேலப்பாளையத்தில் காத்திருந்தனர். அவர்கள் கையில் கருப்பு கொடியுடன் நின்று கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆனால், திருநாவுக்கரசர் குறுக்குத்துறையில் இருந்து சந்திப்பு, வண்ணார்பேட்டை, புதிய பஸ் நிலையம் வழியாக ஏர்வாடிக்கு சென்றதால், கருப்பு கொடி காட்ட முடியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் நிர்வாகிகளிடம் பேசி அனுப்பி வைத்தனர். இதனால் மேலப்பாளையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லைக்கு குஷ்பு வந்தது குறித்து காங்கிரஸ் அலுவலகம் பூட்டப்பட்டது குறித்து திருநாவுக்கரசரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதில் கூறியதாவது:–
நெல்லைக்கு குஷ்பு வந்தது குறித்தும், இங்கு நடந்த சம்பவங்கள் குறித்தும் எனக்கு முழுமையாக தெரியாது. அதுகுறித்து விசாரித்து தெரிந்து கொண்ட பிறகு விளக்கம் அளிக்கப்படும்.
தற்போது தொடங்கி உள்ள சின்ன கட்சிகளில் கூட கோஷ்டிகள் உள்ளன. அப்படி இருக்கும்போது கோடிக்கணக்கான தொண்டர்களை கொண்ட காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பிரச்சினை இருக்கத்தான் செய்யும். ஒரு குடும்பம் என்று இருந்தால் பல கருத்துகள் இருப்பது போல் கட்சியிலும் இருக்கும். ஆனால் ராகுல்காந்தி தலைமையில் விரைவில் மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு அனைவரும் பாடுபட்டு வருகிறோம்.
இதில் குஷ்பு பிரச்சினை எல்லாம் ஒன்றும் பெரியதல்ல. அன்றைய தினம் குஷ்பு கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர். ஒரு கட்சி அலுவலகத்தை தினமும் திறந்து வைத்திருக்க முடியாது. அன்றைய தினம் நிர்வாகி வெளியூருக்கு சென்று விட்டதாக கூறுகின்றனர். இதுகுறித்து குஷ்பு புகார் கொடுத்தால் விசாரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.