மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ரெயில் சேவை பாதிப்பு

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

Update: 2018-02-03 22:30 GMT
மும்பை,

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

தண்டவாளத்தில் விரிசல்

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள உம்ரோலி ரெயில் நிலையம் அருகே நேற்று காலை 7.15 மணியளவில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை அங்கு பணியில் இருந்த கேட்மேன் இருவர் கவனித்தனர்.

உடனடியாக இதுபற்றி அவர்கள் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அந்த வழியாக மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரெயில்கள் மற்றும் நீண்ட தூர ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன.

பயணிகள் அவதி

ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பலரும் வேலைக்கு செல்லும் காலை நேரத்தில் ஏற்பட்ட இந்த ரெயில் சேவை பாதிப்பால் நடுவழியில் நிறுத்தப்பட்ட ரெயில்களில் இந்த பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

ரெயில்கள் வராமல் ரெயில் நிலையங்களில் நின்ற பயணிகளும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்த நிலையில், சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு அந்த தண்டவாளம் சரி செய்யப்பட்டது. அதன்பின்னர் அந்த வழியாக ரெயில்கள் இயக்கப்பட்டன. இருந்தாலும் ரெயில்கள் மிதவேகத்தில் ஊர்ந்தபடியே அப்பகுதியை கடந்து சென்றதை காண முடிந்தது.

மேலும் செய்திகள்