வாடிக்கையாளர்களின் போன் அழைப்பு விவரங்களை விற்ற பெண் துப்பறிவாளர் கைது

வாடிக்கையாளர்களின் போன் அழைப்பு விவரங்களை விற்ற பெண் துப்பறிவாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-02-03 23:00 GMT
மும்பை,

வாடிக்கையாளர்களின் போன் அழைப்பு விவரங்களை விற்ற பெண் துப்பறிவாளர் கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோத துப்பறியும் நிறுவனம்

தானே கல்வாவில் உரிய அனுமதி பெறாமல் துப்பறியும் நிறுவனம் நடத்தி வந்த முகேஷ், பிரசாந்த், ஜிகர், சாம்ரேஷ் ஆகிய நான்கு பேரை தானே குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து இருந்தனர்.

விசாரணையில் அவர்கள் தங்களது வாடிக்கையாளர்களின் போன் அழைப்பு விவரங்களை ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை பெற்றுக்கொண்டு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இந்த நிலையில், இவர்களிடம் இருந்து சில வாடிக்கையாளரது போன் அழைப்பு விவரங்களை மும்பை மாகிமை சேர்ந்த பெண் துப்பறிவாளர் ரஞ்சனி பண்டித் என்பவர் ரூ.15 ஆயிரத்துக்கு வாங்கியிருந்தது தெரியவந்தது.

பெண் துப்பறிவாளர் கைது

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் அந்த அழைப்பு விவரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்திருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரஞ்சனி பண்டித்தையும் அதிரடியாக கைது செய்தனர்.

அவரிடம், மேற்படி கைதான நான்கு பேரிடம் இருந்து யார், யாருடைய போன் அழைப்பு விவரங்களை வாங்கினார்? அந்த விவரங்களை யாரிடம் பணத்திற்கு விற்பனை செய்தார் என்பதை கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்