கடையநல்லூரில் பஸ் நிலையத்தில் பயணியின் பணப்பையை பறித்துச் சென்ற கும்பல் 3 பேர் கைது; கார் பறிமுதல்
கடையநல்லூர் பஸ் நிலையத்தில் பயணியின் பணப்பையை காரில் வந்து கும்பல் பறித்துச் சென்றது.
கடையநல்லூர்,
கடையநல்லூர் பஸ் நிலையத்தில் பயணியின் பணப்பையை காரில் வந்து கும்பல் பறித்துச் சென்றது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
பஸ் நிலையம்
நெல்லை மாவட்டம் கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தன. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் உத்தரவின் பேரில், செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் கடையநல்லூர் பஸ் நிலையத்தில் சங்கரன்கோவில் நேரு தெருவைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் ரூ.25 ஆயிரத்தை கைப்பையில் வைத்து பஸ்சுக்காக காத்து நின்றார். அப்போது, பஸ் நிலையத்திற்குள் வேகமாக ஒரு கார் வந்தது.
அந்த காரில் இருந்து இறங்கிய 2 பேர் திடீரென்று மாரியப்பன் கையில் வைத்திருந்த பணத்தை பறித்துவிட்டு காரில் தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாரியப்பன் சத்தம் போட்டார்.
3 பேர் கைது
அப்போது, அந்த வழியாக வந்த தனிப்படை ரோந்து வாகனம் காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தது. பின்னர் காரில் இருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் செங்கோட்டையை சேர்ந்த இம்ரான் (வயது 25), காதர்பிச்சை மகன் முகம்மது இப்ராகிம், பீர்முகம்மது மகன் சிகாத் முகம்மது (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட இம்ரான் பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதும், அவர் செங்கோட்டையில் உள்ள தி.மு.க. பிரமுகர் ஒருவரின் மகன் என்பதும் தெரியவந்தது. வழிப்பறிக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.