கோவில்பட்டி, திருச்செந்தூரில் அண்ணா நினைவுநாள் அனுசரிப்பு

கோவில்பட்டி, திருச்செந்தூரில் அண்ணா நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

Update: 2018-02-03 21:30 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டி, திருச்செந்தூரில் அண்ணா நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

திருச்செந்தூர்

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அண்ணா உருவப்படத்துக்கு தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாநில மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், முத்தையாபுரம் பகுதி செயலாளர் கருணாகரன், விவசாய அணி அமைப்பாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி தமிழரசன் படிப்பகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட அண்ணா உருவப்படத்துக்கு தி.மு.க. நகர அவை தலைவர் முனியசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒன்றிய செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அண்ணா நினைவு நாளையொட்டி, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. மதியம் பொது விருந்து நடந்தது. கோவில் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணிய ராஜன், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்