அ.தி.மு.க., தி.மு.க.வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அரியலூர் மாவட்டங்களில் அ.தி.மு.க., தி.மு.க. வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரியலூர்,
அண்ணா நினைவு தினத்தையொட்டி பெரம்பலூர் புறநகர் பஸ்நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் துரை தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவசிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் மருதராஜா எம்.பி., பெரம்பலூர் மாவட்ட மாணவரணி செயலாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ராசாராம், மாநில மீனவரணி இணைச்செயலாளர் வெண்பாவூர் தேவராஜன், நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் காந்தி பூங்காவிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு திருச்சி சாலைக்கு வந்தனர். பின்னர் அங்கு உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட துணை செயலாளர் தங்கபிச்சமுத்து மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செந்துறையில், தி.மு.க. சார்பில் முன்னாள் ஒன்றிய செயலாளர் கந்தசாமி தலைமையில், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் செந்துறை ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி (வடக்கு) உள்பட கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் வேப்பந்தட்டை மற்றும் கிருஷ்ணாபுரம் ஆகிய இரண்டு இடங்களில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில், தி.மு.க வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.