பெருந்துறை அருகே இரும்பு கம்பியால் மூதாட்டி அடித்து கொலை
பெருந்துறை அருகே இரும்பு கம்பியால் மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்டார். பொதுமக்கள் தாக்கியதில் கொலையாளியும் இறந்தார்.
பெருந்துறை,
பெருந்துறை பெத்தாம்பாளையம் அருகே உள்ளது கருக்கம்பாளையம். இங்குள்ள கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் உள்ள பெரியதோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் இறந்துவிட்டார். அவருடைய மனைவி மாராயம்மாள் (வயது 80). இவர்களுக்கு தங்கவேல் என்ற மகனும், ரத்தினம் என்ற மகளும் உள்ளார்கள். இவர்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
தங்கவேல் வீட்டையொட்டி விசைத்தறி குடோன் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது குடும்பத்துடன் மாராயம்மாள் வசித்து வந்தார். பெத்தாம்பாளையம் அருகே உள்ள நரிப்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (60). இவர் மாராயம்மாளின் உறவினர் ஆவார்.
ஆறுமுகம் நேற்று காலை தங்கவேல் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு மாராயம்மாள் மட்டும் தனியாக இருந்தார். தங்கவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் விசைத்தறி குடோனில் இருந்தார்கள்.
தனியாக இருந்த மாராயம்மாளிடம் ஆறுமுகம் ஏதோ பேசியுள்ளார். திடீரென அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் அங்கு கிடந்த இரும்பு கம்பியை எடுத்து மாராயம்மாளை தாக்கியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தபடி கீழே சாய்ந்தார். இதனால் ஆறுமுகம் அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றார். சத்தம் கேட்டு அந்தப்பகுதியை சேர்ந்த சிலர் அங்கு ஓடிவந்தார்கள். ஆறுமுகத்தை விரட்டிச்சென்றனர். இதில் சிறிது தூரத்தில் வைத்து அவரை பிடித்து தாக்கினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த அவரும் கீழே விழுந்தார்.
இதற்கிடையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாராயம்மாளை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி மாராயம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஆறுமுகம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ஆறுமுகத்துக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
பெருந்துறை அருகே மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்டது மற்றும் கொலையாளியும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.