பட்டரவாக்கம் ரெயில் நிலையத்தில் மோதல்: கல்லூரி மாணவர்கள் மேலும் 3 பேர் கைது

பட்டரவாக்கம் ரெயில் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2018-02-01 22:30 GMT
அம்பத்தூர், 

அம்பத்தூரை அடுத்துள்ள பட்டரவாக்கம் ரெயில் நிலையத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், மாநில கல்லூரி மாணவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. கத்தி உள்ளிட்ட ஆயுதங் களால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் மாநில கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.

இந்த மோதல் சம்பவம் குறித்து பெரம்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநின்றவூரைச்சேர்ந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர் மோகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் சில மாணவர்களை போலீசார் தேடி வந்தனர்.

3 பேர் கைது

இந்த நிலையில் இந்த மோதல் சம்பவத்தில் தொடர்புடைய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான ஆவடி வீராபுரத்தை சேர்ந்த தினேஷ்குமார்(வயது 20), ஆவடி அரிகம்பேடு பகுதியை சேர்ந்த ராமசுந்தர்(20), திருத்தணியை சேர்ந்த சுரேந்தர்(20) ஆகிய மேலும் 3 பேரையும் நேற்று காலை ஆவடி ரெயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

பின்னர் கைதான 3 பேரையும் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 8 மாணவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்