கரூர் லாரி டிரைவர் கொலை வழக்கு: 4 வாலிபர்கள் கைது
கரூரை சேர்ந்த லாரி டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெரம்பலூரில் வாலிபர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்,
கரூர் மாவட்டம், மண்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 45). லாரி டிரைவர். இவர் மக்காச்சோளம் ஏற்றுவதற்காக பெரம்பலூர் நான்குரோடு பகுதியில் உள்ள லாரி புக்கிங் அலுவலகத்திற்கு கடந்த 28-ந்தேதி வந்துள்ளார். இந்நிலையில், இரவு திருச்சி-சென்னை தேசியநெடுஞ்சாலையில் பெரம்பலூரில் உள்ள ஒரு வயல் காட்டுப்பகுதியில் கணேசன் மயங்கிய நிலையில் உடலில் காயங்களுடன் கிடந்துள்ளார். இதைபார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கணேசனை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கணேசனிடம் இருந்த செல்போன் மற்றும் பணம் காணாமல் போனது தெரியவந்தது.
4 பேர்
இதையடுத்து போலீசார் தொலைந்து போன கணேசனின் செல்போன் நம்பரை வைத்து, துப்பு துலக்கியதில் பெரம்பலூர் 12-வது வார்டு ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த காளிமுத்து மகன் ராஜா (19), மகாராஜா மகன்கள் மணிகண்டன் (19), சதீஸ்குமார் (24), வெங்கடேசபுரத்தை சேர்ந்த செல்வம் (22) ஆகிய 4 பேரும் இதில் சம்பந்தப்பட்டு இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 4 பேரும் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
சிறையில் அடைத்தனர்
சம்பவத்தன்று லாரி டிரைவர் கணேசன் மதுகுடிக்க பெரம்பலூர் நான்குரோடு சந்திப்பு அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்தார். அப்போது நாங்கள் டாஸ்மாக் கடையில் அதிக சத்தம்போட்டு பேசிக்கொண்டு மது அருந்திகொண்டு இருந்தோம். இதை பார்த்த கணேசன் ஏன் இப்படி சத்தம் போடுகிறீர்கள் என்று எங்களிடம் கேட்டார். அப்போது கணேசனுக்கும், எங்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாங்கள் 4 பேரும் சேர்ந்து கணேசனை சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டு அவரிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை எடுத்து சென்றோம். கணேசனின் தொலைந்துபோன செல்போன் எண்ணை வைத்து துப்பு துலக்கியதில் நாங்கள் 4 பேரும் சிக்கிக்கொண்டோம் என்று அவர்கள் போலீசாரிடம் கூறினர். இதையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து ராஜா, மணிகண்டன், சதீஸ்குமார், செல்வம் ஆகிய 4 பேரையும் கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.