நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? கருத்தரங்கில் விஞ்ஞானி விளக்கம்
நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் நடந்த தேசிய கருத்தரங்கில் விஞ்ஞானி சித்ரா சங்கர் விளக்கம் அளித்தார்.
நெல்லை,

தேசிய கருத்தரங்கம்
தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் “உயிரியல் முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்துவது மற்றும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்புக்கான சர்வதேச கருத்தரங்கம்“ 3 நாட்கள் நடந்தது. இதில் உயிரியல் முறையில் பூச்சி கட்டுப்பாடு குறித்து 7 தொழில்நுட்ப கருத்தரங்குகள் நடத்தப்பட்டு அதில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் விவாதத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
கருத்தரங்கில் ஐதராபாத் விஞ்ஞானி அலைஸ் பேசும் போது, “நன்மை செய்யும் பூச்சிகளை, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் முறைகளை இன்னும் செம்மைப்படுத்த வேண்டும் என்றார். இந்திய நெல் ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி சித்ராசங்கர் பேசுகையில், நெல் பயிரில் பூச்சி தாக்குதல் அதிகமாக இருந்தால், நெல் பயிரிட்டுள்ள வரப்புகளில் வேறு பயிர் இனங்களான உளுந்து, தட்டைப்பயறு, பாசிப்பயறு, செண்டு மல்லி உள்ளிட்டவற்றை வளர்த்து அந்த பூச்சிகளை எளிதில் கட்டுப்படுத்தலாம் என்றார்.
பரிசுகள்
ஆசிய காய்கறி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக தலைமை விஞ்ஞானி சீனிவாசன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு இயக்குனர் ராமராசு, சன் அக்ரோ பயோடெக் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சித்தானந்தம், புதுடெல்லியை சேர்ந்த இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் அகுஜா, திண்டுக்கல் மாவட்ட வன அலுவலரும், கல்லூரியின் முன்னாள் மாணவருமான வெங்கடேசன் ஆகியோரும் பேசினர். கருத்தரங்கில் சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்த விஞ்ஞானிகளுக்கு கல்லூரி முதல்வர் ராமலிங்கம் பரிசுகள் வழங்கினார். பூச்சியியல் துறை தலைவர் அப்துல் ரசாக், கருத்தரங்கின் சிறந்த முடிவுகளை பட்டியலிட்டு கூறினார். கல்லூரி பண்ணை மேலாண்மைத்துறை தலைவர் வேலாயுதம் நன்றி கூறினார்.