நீட் தேர்வு; நீங்காத கலக்கம்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி, தமிழகத்தையே, ஏன் இந்தியாவையே சோகத்தில் மூழ்கடித்த தினம். அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்த ஏழை கூலித்தொழிலாளியின் அறிவுமிகு மகள் அனிதா இறப்பு நிகழ்ந்த நாள் அது.
ஏழைத் தொழிலாளிக்கு மகளாக பிறந்தாலும் படிப்பில் கெட்டிக்காரி. பன்னிரெண்டாம் வகுப்பில் 1,176 மதிப்பெண்கள் பெற்ற அந்த மாணவி, எப்படியும் தன் வாழ்நாள் கனவான மருத்துவராகி ஏழை எளியோருக்கு இலவசமாக மருத்துவ சேவை புரியலாம் என எண்ணிக்கொண்டு இருந்த வேளையில், அனிதாவின் உயிரை பறிக்கும் எமனாக உருவெடுத்தது நீட் தேர்வு.
ஒரே பாடத்திட்டத்தை நாடு முழுக்க கொண்டு வந்த பின்பு, ஒரே மாதிரியான போட்டி தேர்வுகளை நடத்தி மாணவர்களை தேர்வு செய்வதே சமதர்மம், ஜனநாயகம். இதை உணர்ந்திடாமல், சர்வாதிகார போக்குடன் மத்திய அரசு நீட் தேர்வை தமிழக மாணவர்கள் மீது திணித்தது. அதுவும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்வித்தாள் தயாரிக்கப்படுகிறது. முதலில் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு, பல போராட்டங்கள் நடந்ததால் திரும்ப பெறப்பட்டது. போராட்டத்தின் விளைவால், அவரவர் தாய்மொழியில் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மற்றும் மாநில எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவராலும் மிகவும் தீவிரமாக எதிர்க்கப்பட்ட இந்த நீட் தேர்வு கடைசியில் தற்போதைய அரசால் வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது.அதுவும் மத்திய மந்திரிகள், மாநில முதல்-அமைச்சர் உள்பட அனைவரும் நீட் தேர்வில் இருந்து கடந்த ஆண்டு விலக்கு பெற்றுவிடுவோம் என்று கடைசிவரை தமிழக மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றத்தை பரிசளித்துவிட்டனர். அதன் விளைவு தான் அனிதாவின் மரணம். தற்கொலை செய்ததால் ஒரு அனிதா நாட்டுக்கு தெரிந்தாள். ஆனால், இன்னும் பல அனிதாக்கள் கலைந்துபோன கனவுடன் விருப்பமில்லாத பாடங்களை பயின்று வருகிறார்கள்.
இறுதிவரை நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்று விடுவோம் என முயன்று தோற்றுப்போன அரசு, அதை சரிகட்ட உடனடியாக பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத்தேர்வு என அவசரகதியில் அறிவிப்பு வெளியிட்டது. முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் பல இன்னமும் நிரப்பப்படாமல், இத்தகைய அறிவிப்பு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என தெரியாமலேயே இதை அவசரகதியில் அமல்படுத்தி உள்ளார்கள். மேலும், சுமார் 3 ஆயிரம் மருத்துவ பணியிடங்களுக்காக 8½ லட்சம் மாணவர்களுக்கு பிளஸ்-1 தேர்வு கொண்டு வந்திருப்பது ஏற்புடையது அல்ல.
அரசு பள்ளி மாணவர்களுக்காக பள்ளிக்கல்வி துறை சார்பில் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவித்தார். பிப்ரவரி மாதம் வந்துவிட்டது. இதுவரை 100-க்கு குறைவான மையங் களே பள்ளிக்கல்வி துறை சார்பாக தொடங்கப்பட்டு உள்ளன. மீதி மையங்கள் எப்போது திறக்கப்படும்? திறக்கப்பட்ட மையங்களில் நீட் பயிற்சி வகுப்புகள் முழுமையாக நடைபெறுகிறதா? இதற்காக தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? என சந்தேகங்களை கிளப்பும் கேள்விகளும் எழாமல் இல்லை.
பல தனியார் பள்ளிகளில் நீட் தேர்வு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்காக பல லட்சம் ரூபாயை மாணவர்கள் செலவு செய்கிறார்கள். அதிலும் சில பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பாடங்களை நடத்தாமல் நேரடியாக நீட் நுழைவுத்தேர்வுக்கு மட்டும் பயிற்சிகள் நடத்தப்படுவதாக அறியப்படுகிறது. வசதியுள்ளவர்கள் இப்படி படிக்கின்றனர். வசதி, வாய்ப்பற்ற ஏழை, எளிய மக்களின் நிலை என்ன ஆவது?
ஏற்கனவே பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு ஆயத்தப்பணி, தேர்வுப்பணி, இறுதியாக விடைத்தாள் திருத்தும் பணி என அனைத்திலும் அரசு பள்ளி ஆசிரியர்களே பெரும்பாலும் நியமிக்கப்படுகின்றனர். அரசு பள்ளி மாணவர்களின் தேர்வுப்பணி, விடைத்தாள் திருத்தும் பணியோடு சேர்த்து தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தேர்வு பணியையும், விடைத்தாள் திருத்தும் பணியையும் அரசுப்பள்ளி ஆசிரியர்களே செய்து வருகிறார்கள். ஆனால், தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் இத்தகைய பணிக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை. இதுபோன்ற காரணங்களால் அரசு பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிப்பது தடைபடுகிறது. மேற்கண்ட பணிகளில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடாத காரணத்தால் அவர்கள் தொடர்ந்து நீட் தேர்வு முடியும் வரை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
தற்போதைய சூழ்நிலைகளை உற்று பார்க்கையில், இனிவரும் காலங்களில் அரசு பள்ளியில் பயின்றாலே மருத்துவராக முடியாது என்ற நிலை ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மனதில் தொற்றி இருக்கிறது. இந்நிலையை மாற்றிடும் பொறுப்பு அரசு வசமே உள்ளது.
நீட் தேர்வு என்பதே தரமான மருத்துவர்கள் வரவேண்டும் என்ற நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டது. உண்மையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வு என்ற முறை வருவதற்கு முன்பு, மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டு தரமான மருத்துவர்களாகவே அங்கிருந்து வெளிவந்தார்கள். அவர்கள் தரத்தை எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் புற்றீசல் போல் தனியார் மருத்துவக்கல்லூரிகளை திறந்துவிட்டதன் விளைவாக, கல்லூரி நிர்வாகத்தினர் வியாபார நோக்கில் பிளஸ்-2 வகுப்பில் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும் மருத்துவ படிப்பில் சேர அனுமதி வழங்கி அவர்களிடம் பெற்ற கட்டணத்திற்கு பிரதிபலனாக அவர்களை எப்படியாவது மருத்துவராக்கிவிடுகின்றனர்.
எனவே, குறைந்தபட்சம் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஏழை, எளிய மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வில் விலக்கு பெற தமிழக அரசு தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்த வேண்டும். அதுவரை இடைக்கால நிவாரணமாக அரசு பள்ளி மாணவர்களை வஞ்சிக்காமல் அரசு அறிவித்த 412 நீட் பயிற்சி மையங்களை உடனடியாக திறக்க வேண்டும். மேலும், அதற்கென தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தனியாக நியமிக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் பயிற்சி மையங் களை திறந்து சுமார் 3 ஆயிரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ பணியிடங்களில் 2 ஆயிரம் பணியிடங்களை அரசு பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்கள் பெறக்கூடிய வகையில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இதன்மூலம், அனிதாக்களின் வாழ்வை வளப்படுத்திக் கொடுக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து பள்ளிகளிலும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். நீட் பயிற்சி மையங்களுக்கென தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தனியாக நியமிக்க வேண்டும். இல்லையெனில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு எட்டாக் கனியாகிவிடும்.
-கு.தியாகராஜன், மாநில தலைவர், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம்