பொதுமக்களிடையே நாட்டு காய்கறிகள் மவுசு குறைந்தது
மானாமதுரை வட்டாரத்தில் நாட்டு காய்கறிகளுக்கு பொதுமக்களிடையே மவுசு குறைந்ததால் அவற்றை விவசாயிகள் வேதனையுடன் சாலையில் வீசி செல்கின்றனர்.
மானாமதுரை,
மானாமதுரை வட்டாரத்தில் முத்தனேந்தல், பெருமச்சேரி, ஆவரங்காடு, வெள்ளிக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு நாட்டு காய்கறிகளான வெண்டைக்காய், கத்தரிக்காய், அவரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், பாகற்காய் உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. குறைந்த அளவு தண்ணீர் தேவை, பராமரிப்பு செலவு குறைவு, நோய் தாக்குதல் குறைவு, தினசரி வருமானம் போன்ற காரணங்களால் விவசாயிகள் நாட்டு காய்கறிகளை அதிகம் பயிரிடுகின்றனர். வாரச்சந்தை நடைபெறும் நாட்களில் சந்தைகளில் கடைகள் அமைத்து நாட்டு காய்கறிகளை விற்பனை செய்து, அதில் கிடைக்கும் வருவாயில் வீட்டிற்கு தேவையான மற்ற பொருட்கள் வாங்கி செல்வது வழக்கம்.
ஆனால் வாரச்சந்தைகளில் நாட்டு காய்கறிகளுக்கு தற்போது மவுசு குறைந்ததால் போதிய விலை கிடைக்கவில்லை. இதேபோன்று வரத்து அதிகரிப்பும் இதற்கு ஒரு காரணம்.
மானாமதுரை, முத்தனேந்தல், திருப்பாச்சேத்தி, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் வாரச்சந்தைகள் நடைபெறுகின்றன. பெரும்பாலான மக்கள் வாரச்சந்தையில் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கி இருப்பு வைத்து கொள்வது வழக்கம். தற்போது முட்டை கோஸ், காலி பிளவர், பீன்ஸ், பெங்களூரு தக்காளி உள்ளிட்டவற்றையே விரும்பி வாங்குகின்றனர். நாட்டு காய்கறிகளை வாங்குவது கிடையாது. இதனால் விவசாயிகள் போதிய விலை கிடைக்காமல் வேதனையில் காய்கறிகளை சாலையில் வீசிவிட்டு சென்று விடுகின்றனர். முத்தனேந்தல் வாரச்சந்தையில் கத்தரிக்காய் கிலோ ரூ.30, வெண்டைக்காய் கிலோ ரூ.20, பீர்க்கங்காய், புடலங்காய் உள்ளிட்டவை ரூ.10 என்று விற்பனை செய்தும் யாரும் வாங்கவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் விவசாயிகள் சாலையோரம் காய்கறிகளை கொட்டிவிட்டு செல்கின்றனர்.
தமிழக சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற காய்கறிகள் புடலை, அவரை, பீர்க்கங்காய், கத்தரிக்காய் போன்றவையாகும். எனவே பொதுமக்களும் நாட்டு காய்கறிகளின் மகத்துவத்தை அறிந்து அவற்றை வாங்க முன்வரவேண்டும். வேளாண் துறை, தோட்டக்கலை துறை அதிகாரிகளும் நாட்டு காய்கறிகளின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் அறியும்படி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.