சமத்துவ மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-02-01 02:19 GMT
பரங்கிப்பேட்டை,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கடலூர் மாவட்ட தலைவர் ஆனந்தராஜ் தலைமை தாங்கி, பஸ் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சூர்யபிரசாந்த், தேவசகாயம், மயில்வேல், வேலாயுதம், தரணி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்