ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு குவிந்த பட்டதாரிகள்

ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு பட்டதாரிகள் குவிந்தனர். என்ஜினீயரிங் முடித்தவர்களும் பங்கேற்றனர்.

Update: 2018-02-01 01:19 GMT
கரூர்,

கரூர் மாவட்ட ரேஷன் கடைகளில் 74 விற்பனையாளர் காலிப்பணியிடங்களுக்கு நியமனத்திற்கான விண்ணப்பம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வினியோகிக்கப்பட்டது. இதில் பிளஸ்-2 வகுப்பு முடித்தவர்கள் கல்வி தகுதியாக கொண்ட இந்த பணிக்கு பட்டப்படிப்பு முடித்தவர்களும், என்ஜினீயர்களும் ஏராளமானோர் விண்ணப்பித்தனர். மொத்தம் 4 ஆயிரத்து 700 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யும் பணி கடந்த 29-ந்தேதி முதல் தொடங்கி கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பின்புறம் உள்ள கூட்டுறவு துறை அலுவலகத்தில் நடந்து வருகிறது. விண்ணப்பதாரர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு நேர்முகத்தேர்வு கடிதம் அனுப்பப்பட்டு வரவழைக்கப்படுகின்றனர்.

என்ஜினீயர்கள்

இந்த நிலையில் விண்ணப்பித்தவர்களில் நேற்று பட்டதாரிகள் அதிக அளவில் குவிந்தனர். என்ஜினீயரிங் முடித்தவர்களும் வந்திருந்தனர். இளம்பெண்களும், வாலிபர்களும் அதிக அளவில் காணப்பட்டனர். விண்ணப்பதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரிசையாக அனுமதிக்கப்பட்டனர். விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தேர்வு நடந்தது. இந்த ஆட்கள் தேர்வு இன்றும் (வியாழக்கிழமை) நடக்கிறது. படிப்பிற்கு தகுந்த வேலை இல்லாத காரணத்தால் ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு வந்ததாக பட்டதாரிகளும், என்ஜினீயர்களும் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்