நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட மணமகனுடன் திருமணம் செய்து வைக்கக்கோரி இளம் பெண் 2-வது நாளாக போராட்டம்
நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட மணமகனுடன் திருமணம் செய்து வைக்கக்கோரி இளம் பெண் 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் திருத்துறைப்பூண்டி அருகே பரபரப்பு ஏற்பட்டது.
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூர் கீழத்தெருவை சேர்ந்தவர் இந்திரன் (வயது 50). விவசாயி. இவருடைய மகள் ரம்யா (20). இவர் நர்சிங் படித்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் மாதவன் (24). இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு கோழி நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இந்தநிலையில் ரம்யாவுக்கும், மாதவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மலர்ந்தது. இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம் இருவரது பெற்றோர்களுக்கும் தெரியவந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. வருகிற 11-ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்தநிலையில் மணமகன் மாதவன் போக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அவர் ரம்யாவை திருமணம் செய்ய மறுத்ததாக தெரிகிறது. இந்த தகவல் ரம்யாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் அவரது பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக தீர்வு ஏற்படவில்லை.
இதனால் நேற்றுமுன்தினம் ரம்யா மற்றும் அவரது உறவினர்கள் மணமகன் மாதவன் வீட்டுக்கு சென்றனர். அங்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட மாதவனை திருமணம் செய்து வைக்கக்கோரி அவரது வீட்டிற்கு முன்பு அமர்ந்து ரம்யா உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தர்ணா பேராட்டம்
இந்தநிலையில் நேற்று 2-நாளாகவும் ரம்யா, மாதவன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், மாதவன் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கும் வரை இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று தெரிவித்தார். இதுகுறித்து ரம்யா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) இனிக்கோதிவ்யன், இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சகுந்தலா ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.