கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2018-01-31 08:35 GMT
கலசபாக்கம்,

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு 100 நாள் வேலையை தொடர்ந்து வழங்க வேண்டும், அந்த வேலைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது.

இதற்கு கலசபாக்கம் தாலுகா தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார். 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். மேலும் இது சம்பந்தமான கோரிக்கை மனுக்களையும் அவர்கள் அதிகாரிகளிடம் வழங்கினர்.

மேலும் செய்திகள்