கீழ்பவானி வாய்க்காலில் புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும், விவசாயிகள் கோரிக்கை
கீழ்பவானி வாய்க்காலில் புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று வேளாண்மை குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஈரோடு,
வேளாண்மை குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் கீழ்பவானி வாய்க்காலின் முதலாம் மண்டல பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் பலர் திரண்டு வந்து கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் பேசும்போது கூறியதாவது:-
பவானிசாகர் அணையில் 7 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும், நீலகிரி நீர்மின் அணைகளில் சுமார் 11½ டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது. கீழ்பவானி வாய்க்காலில் ஒற்றைப்படை மதகுகளின் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க 7½ டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தேவைப்படும். எனவே புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரை சிலர் தொழிற்சாலைகளுக்கு எடுத்து பயன்படுத்துகிறார்கள். இதை முறைப்படுத்த வேண்டும். நீரா தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். வானிலை கண்டறியும் கருவியின் பதிவு விவரங்களை விவசாயிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீர் பாசன கருத்தரங்கம் நடத்த வேண்டும்.
டீசல், பெட்ரோல் விலை தினமும் ஏறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் பால் விலையில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே பசும்பாலுக்கு டீசல் விலையும், எருமை பாலுக்கு பெட்ரோல் விலையும் கொடுக்கலாம்.
கீழ்பவானி கிளை வாய்க்கால் பல இடங்களில் சேதமடைந்து கிடக்கிறது. இதை சீரமைக்க வேண்டும். கால்நடைகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்களில் மஞ்சள் ஏலம் நடப்பதால் விவசாயிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே ஒரே இடத்தில் மஞ்சள் ஏலம் நடத்த வேண்டும்.
நெல் அறுவடை பணிகள் தொடங்கப்பட உள்ளதால் அரசு கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட வேண்டும். இதில் சன்னரகம் ஒரு கிலோவுக்கு 16 ரூபாய் 60 காசும், மோட்டா ரகம் ஒரு கிலோவுக்கு 16 ரூபாயும் நிர்ணயம் செய்ய வேண்டும். ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் செல்லும் காலிங்கராயன் வாய்க்காலில் குழாய் மூலமாக கொண்டு வந்து சாயக்கழிவு கலக்கப்படுகிறது. மேலும், அந்த பகுதியில் சாய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து மஞ்சள் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த மஞ்சள் ஈரோடு மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்து உள்ளது. இதனால் உள்ளூர் சிறு, குறு விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே வெளிநாடுகளில் இருந்து மஞ்சள் இறக்குமதி செய்வதற்கு அதிகபட்ச வரி விதிக்கப்பட வேண்டும்.
தாளவாடி பகுதியில் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் கரும்பு விவசாயிகளிடம் குறைவான தொகையை கொடுத்து கையெழுத்து வாங்கி உள்ளனர். இது மோசடி செய்வது போன்று உள்ளது. இதை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். விவசாய நிலங்களில் மின்சார உயர்கோபுரங்கள் அமைப்பதற்கு வழங்கப்படும் இழப்பீடு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினார்கள்.
அதற்கு விளக்கம் அளித்து மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் பேசும்போது கூறியதாவது:-
நீர் மேலாண்மை குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்ட பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்மின் அணைகளில் உள்ள தண்ணீரை திறந்து விடுவது தொடர்பாக தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. பல இடங்களில் விவசாயிகள் தண்ணீரை விற்பனை செய்கிறார்கள். தண்ணீர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுத்து 15 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. ஆனால் பாதிக்கப்பட்ட விவசாய சங்க நிர்வாகிகள் முறையீடு செய்வதுடன், என் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்கிறார்கள்.
நீரா தயாரிப்பது குறித்த பயிற்சி வருகிற பிப்ரவரி மாதம் 2-வது வாரத்தில் தொடங்கப்படும். கீழ்பவானி கொப்பு வாய்க்காலில் பல்வேறு இடங்களில் விவசாயிகளே மண்ணை கொட்டி மூடுகிறார்கள். இதுதொடர்பாக அதிகமான புகார்கள் வருகின்றன. எனவே பாசன சங்கத்தினர் சம்பந்தப்பட்ட விவசாயிகளை கண்டிக்க வேண்டும். விவசாய விளைபொருட்களை ஒரே இடத்தில் ஏலம் விடுவதற்கு உத்தரவிட முடியாது. எனவே மஞ்சள் ஏலம் விடுவதில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க ஆலோசனை நடத்தி வருகிறோம்.
பவானி ஆற்றில் இருந்து 200 மீட்டர் தூரம் வரை தொழிற்சாலைகள் அமைக்க மின் இணைப்பு கொடுக்கக்கூடாது. இதில் மின் இணைப்பு பெற கிராம நிர்வாக அதிகாரி, தாசில்தார் உள்ளிட்டோரின் சான்றிதழ் செல்லுபடி ஆகாது. மாவட்ட கலெக்டரின் ஒப்புதல் சான்றிதழ் இருந்தால் மட்டுமே மின்சார வாரிய அதிகாரிகள் மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.