முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை வேண்டும்
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேனியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
தேனி,
முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தேனி பங்களாமேட்டில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும், வருகிற மே 31-ந்தேதிக்குள் பேபி அணையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பணியில் ஈடுபடுத்த வேண்டும், அணையை பார்வையிட சென்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டரை திருப்பி அனுப்பிய கேரள அரசின் நடவடிக்கையை கண்டிப்பது ஆகியவற்றை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது.
இதற்கு, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:-
முல்லைப்பெரியாறு அணையில் எத்தனை முறை ஆய்வு செய்தாலும் அணை பலமாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள். பேபி அணையை பலப்படுத்த தடை இல்லை என்றும் மத்திய துணை கண்காணிப்பு குழு தெரிவிக்கிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
முல்லைப்பெரியாறு அணைக்கு செல்வதற்கு வாங்கப்பட்ட படகு இயக்கப்படவில்லை. மின் இணைப்பு இல்லாமல் அணை இருளில் மூழ்கி உள்ளது. கேரள அரசு மின்சார இணைப்பு கொடுக்க மறுக்கிறது. அணைக்கு அச்சுறுத்தல் உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்து உள்ளது. வாகன நிறுத்தம் அமைத்தும், சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தியும், நீரை சேமிக்கவிடாமல் தடுக்க கேரள அரசு 4 ஆண்டுகளாக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த மாவட்டத்தை சேர்ந்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிகாரிகளை அழைத்து சென்று அணையை பார்வையிட வேண்டும். அணைக்கு தளவாட பொருட்கள் கொண்டு செல்லும் பாதையை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நான் பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன். கேரளாவில் அவர் சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தனது சொத்துப்பட்டியலை வெளியிட தயாரா?. அணையை பார்வையிட சென்ற தொழில் பாதுகாப்பு படை அதிகாரிக்கு அனுமதி மறுத்து கேரள அரசு திருப்பு அனுப்பிய போது, ஓ.பன்னீர்செல்வம் கண்டிக்கவில்லை. உங்கள் குடும்பத்தை பாதுகாக்க, விவசாயிகளை அடகு வைத்து விடாதீர்கள்.
மத்திய அரசுக்கு விவசாயிகள் என்ன துரோகம் செய்தார்கள்?. மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை முழுவதுமாக நிறைவேற்றுவோம் என்று சொன்னார்கள். ஆனால், தற்போது அந்த அறிக்கையை அரசு ஏற்க மறுக்கிறது. மத்திய அரசின் துரோகத்தால் தமிழகம் போராட்ட களமாக மாறி உள்ளது. மத்திய அரசுக்கு எதிராக போராடினால், தமிழக அரசு துடிக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலில் எத்தனை மீனவர்கள் காணாமல் போனார்கள் என்ற புள்ளி விவரங்களை அறிவிக்க தமிழக அரசு தயக்கம் காட்டி வருகிறது. தமிழகத்தில், போராட்டங்கள் இன்னும் தொடரும். சட்டத்தின்படி அரசு நடக்கும் வரை, அமைச்சர்கள் தாங்கள் ஏற்றுக் கொண்ட உறுதிமொழியின் படி நடக்கும் வரை, போலீஸ் துறை சட்டத்தின்படி சுதந்திரமாக செயல்படும் வரை போராட்டங்கள் முடிவுக்கு வராது.
இவ்வாறு அவர் பேசினார்