விவசாயிகளுக்கு பட்டா வழங்கக்கோரி சாலையில் சமைத்து உண்டு, உறங்கும் போராட்டம்
முடிவு செய்யப்படாத பிரிவு-17 நிலத்தில் விவசாயிகள், பொதுமக்களுக்கு பட்டா வழங்கக்கோரி சாலையில் சமைத்து உண்டு, உறங்கும் போராட்டம் நடத்தப்படும் என்று மண்ணுரிமை மீட்பு போராட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூடலூர்,
கூடலூர் தொகுதியில் முடிவு செய்யப்படாத பிரிவு-17 நிலம் மற்றும் வன நிலமாக அறிவிக்கப்பட்ட பிரிவு-53 நிலத்தில் உள்ள சிறு விவசாயிகள், பொதுமக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி கிடைக்க வருவாய் துறையினர் தடையில்லா சான்றிதழ்கள் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தை மூடுவதற்கான நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி மண்ணுரிமை மீட்பு குழு கூட்டம் கூடலூரில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு குழு ஒருங்கிணைப்பாளர் வாசு தலைமை தாங்கினார். பொருளாளர் சளிவயல் சாஜி, துணை ஒருங்கிணைப்பாளர் சகாதேவன், துணை செயலாளர்கள் டி.பாலகிருஷ்ணன், முகமது கனி, அனிபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அரசியல் கட்சி நிர்வாகிகள், பொதுநல அமைப்பினர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும், நிலப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாததால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
பட்டா வழங்க தடையாக உள்ள சட்டம் 1168-ஐ ரத்து செய்ய வேண்டும். முடிவு செய்யப்படாத பிரிவு-17 மற்றும் 53 நிலத்தில் உள்ள சிறு விவசாயிகள், பொதுமக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். வன உரிமை சட்டத்தின்படி ஆதிவாசி குடும்பங்களுக்கு தலா 10 ஏக்கர் நிலமும், அவர்கள் குடியிருக்க தரமான வீடும் கட்டி கொடுக்க வேண்டும். அரசு நிலங்களில் குடியிருக்கும் 10 ஆயிரம் பேரின் வீடுகளுக்கு மின் இணைப்பு கிடைக்க வருவாய் துறையினர் தடையில்லா சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.
ஐகோர்ட்டு மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கண்காணிப்பு கமிட்டியோ (எம்பவர்) குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்கக்கூடாது என கூறவில்லை. ஆனால் ஐகோர்ட்டை மேற்கோள் காட்டி அதிகாரிகள் மின் இணைப்பு மறுக்கப்படுவதை ஏற்க முடியாது. விவசாயிகள், பொதுமக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை ஒற்றுமையுடன் போராட்டங்கள் நடத்தப் படும்.
சிறு விவசாயிகள், பொதுமக்களுக்கு பட்டா, மின்சாரம் வழங்க வலியுறுத்தி ஏப்ரல் 23-ந் தேதி ஒரு லட்சம் பேரை கூடலூரில் திரட்டி பழைய பஸ் நிலையம் தொடங்கி நூதன போராட்டம் நடத்தப்படும். அதன்படி கோரிக்கைகள் நிறைவேறும் வரை புதிய பஸ் நிலையம் வரை சாலையில் சமைத்து உண்டு படுத்து உறங்கும் போராட்டம் நடத்தப்படும். இதற்காக ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் பல்வேறு விளக்க கூட்டங்கள் நடத்தப்படும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.