தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ள கரடிகள்
கோத்தகிரி அருகே உள்ள கல்லாடா கிராமத்தில் தேயிலை தோட்டத்தில் கரடிகள் முகாமிட்டு உள்ளன. இதனால் தேயிலை பறிக்க செல்ல முடியாமல் தொழிலாளர்கள் பீதியடைந்து உள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே ஜக்கனாரை ஊராட்சிக்கு உட்பட்ட கல்லாடா, சேலவை, நடுஹட்டி, பெட்டட்டி, கிராமங்களில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமங்களுக்குள் அடிக்கடி காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள், சிறுத்தைப்புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. ஒரு சில நேரங்களில் குடியிருப்பு மற்றும் தேயிலை தோட்டங்களில் வனவிலங்குகள் முகாமிட்டு அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கல்லாடா கிராமத்தில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் 3 கரடிகள் முகாமிட்டு உள்ளன. கரடிகள் அந்த பகுதியில் உள்ள கோவில் வளாகத்திலும், மரங்களிலும் ஏறி அட்டகாசம் செய்து வருகின்றன. இதன் காரணமாக தேயிலை தோட்டத்துக்கு பசுந்தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்களும், கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் பீதியடைந்து உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வனத்துறையினர் கரடிகள் முகாமிட்டு உள்ள தேயிலை தோட்ட பகுதிக்கு விரைந்து வந்தனர். பின்னர் வனத்துறையினர் பட்டாசு வெடித்து கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதுபற்றி கிராம மக்கள் கூறுகையில், கரடிகளை விரட்டினாலும் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் வந்து விடுகின்றன. அதேபோல் தேயிலை தோட்டங்களிலும் கரடிகள் முகாமிட்டு இருப்பதால் வேலைக்கு செல்ல முடியவில்லை. எனவே ஊருக்குள் வரும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.