கன்னியாகுமரியில் காந்தி நினைவு மண்டபத்தில் கலெக்டர்–விஜயகுமார் எம்.பி. அஞ்சலி
மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான், விஜயகுமார் எம்.பி. ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
கன்னியாகுமரி,
தேசபிதா மகாத்மா காந்தி நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. கன்னியாகுமரி கடற்கரை அருகே காந்தியடிகளின் நினைவு மண்டபம் உள்ளது. இங்குள்ள அஸ்தி கட்டத்தில் நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில், கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் கலந்து கொண்டு அஸ்தி கட்டம் அருகே வைக்கப்பட்டிருந்த காந்தியடிகளின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுபோல், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் விஜயகுமார் எம்.பி., காந்தி படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்தநிகழ்ச்சியில், அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் வக்கீல் ஞானசேகர், ஜெயலலிதா பேரவை தலைவர் கனகராஜன், மாவட்ட கூட்டுறவு இணைய தலைவர் சகாயம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் சந்தையடி பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோல், கன்னியாகுமரி காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம் சார்பிலும் காந்தி நினைவு மண்டபத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சங்க செயலாளர் தம்பி தங்கம், பொருளாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி கடலில் காந்தியின் அஸ்தி பிப்ரவரி மாதம் 12–ந் தேதி கரைக்கப்பட் டது. இதனை நினைவு கூறும் வகையில் அவரது நினைவு மண்டபத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 30–ந் தேதி முதல் பிப்ரவரி 12–ந் தேதி வரை சர்வோதயா சங்கம் சார்பில் ராட்டையில் நூற்பு வேள்வி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் சர்வோதயா சங்கம் சார்பில் நேற்று நூற்பு வேள்வி தொடங்கியது. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த வேள்வி வருகிற 12–ந் தேதி வரை நடக்கிறது.