ஐ.டி. நிறுவன பெண் ஊழியர் தற்கொலை
புனேயில், 7-வது மாடியில் இருந்து குதித்து ஐ.டி. நிறுவன பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
புனே,
புனே முன்ட்வா பகுதியை சேர்ந்த இளம்பெண் அஸ்வினி கவாரே(வயது22). இவர் அங்குள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில தினங்களாக விடுமுறையில் இருந்த அஸ்வினி கவாரே நேற்று காலை வேலைக்கு வந்தார்.
பின்னர் திடீரென அலுவலகம் உள்ள கட்டிடத்தின் 7-வது மாடிக்கு சென்று கீழே குதித்துவிட்டார். இதில், படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார்.
தகவல் அறிந்து வந்த முன்ட்வா போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில், அண்மையில் அஸ்வினி கவாரே நிறுவனத்தில் ராஜினாமா கடிதம் கொடுத்து இருந்ததும், ஆனால் ஐ.டி. நிறுவனம் அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்கவில்லை என்பதும் தெரியவந்தது.
குடும்ப பிரச்சினை காரணமாக அவர், இந்த விபரீத முடிவை எடுத்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அஸ்வினி கவாரே தற்கொலை செய்துகொண்டதற்கான உண்மையான காரணம் தெரியவில்லை. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஐ.டி. நிறுவன மாடியில் இருந்து பெண் ஊழியர் குதித்து தற்கொலை செய்துகொண்ட இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.