தனியார் ஆஸ்பத்திரி மேலாளர் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் கொள்ளை
நாகர்கோவிலில் தனியார் ஆஸ்பத்திரி மேலாளர் வீட்டில் 20 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் ராமன்புதூர் கவிமணிநகரை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 53), நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி, 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
இந்த நிலையில் மோகன்தாஸ் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர் நேற்று அதிகாலை மீண்டும் வீடு திரும்பினார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. பின்புற கதவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
மேலும், மேஜை மற்றும் பீரோ திறந்த நிலையில் இருந்தது. அதில் இருந்த பொருட்கள் கீழே கிடந்தன.
20 பவுன் நகை
பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை காணவில்லை. உடனே இதுபற்றி கோட்டார் போலீசுக்கு மோகன்தாஸ் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள் பின்புற கதவின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. உடனே துப்பு துலக்க மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் பல்வேறு இடங்களில் மோப்பம் பிடித்தது. பின்னர் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்று விட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
ஆய்வு
மேலும், கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் மர்ம நபர்களின் கைரேகைகள் ஏதேனும் பதிவாகியுள்ளதா? என்று கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். நகை மற்றும் பணம் கொள்ளை போன வீட்டைச் சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளன. இதனால் அங்கு எப்போதும் ஆள்நடமாட்டம் இருக்கும். எனினும் மர்ம நபர்கள் துணிகரமாக கைவரிசை காட்டி இருக்கிறார்கள்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.