நீட் தேர்வில் விலக்கு அளிக்கக்கோரி ராமநாதபுரம், காரைக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி வருகிற 5–ந்தேதி காரைக்குடி மற்றும் ராமநாதபுரத்தில் அனைத்துக்கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
காரைக்குடி,
மருத்துவ படிப்பிற்கான பொது நுழைவு தேர்வான நீட், கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி கடந்த 2 ஆண்டுகளாக மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் தமிழகத்தில் மருத்துவம், பல் மருத்துவக்கல்லூரிகளில் சேர்க்கைக்கான நீட் தேர்வில் விலக்கு அளிக்கக்கோரியும், தற்போது இருக்கும் இந்திய மருத்துவ கவுன்சிலை மாற்றி புதிதாக தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதை கைவிட வலியுறுத்தியும், மருத்துவ கல்லூரிகளில் 100 சதவீத இடங்களை தமிழக மாணவர்களுக்கே வழங்கக்கோரியும் அனைத்துக்கட்சிகள் சார்பில் வருகிற 5–ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த 3 கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஐந்து விளக்கு பகுதியிலும், ராமநாதபுரத்தில் அரண்மனை முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் தி.மு.க., ம.தி.மு.க., திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள், காங்கிரஸ், முஸ்லிம் முன்னேற்ற கழகம் உள்பட பல்வேறு கட்சியினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த தகவவல தி.க. மண்டல தலைவர் சாமி.திராவிடமணி, செயலாளர் மகேந்திரராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.