த.மா.கா.வினர் நூதன போராட்டம்

கோவில்பட்டியில் த.மா.கா.வினர் காதில் பூ சுற்றியவாறு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-29 22:15 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டியில் 2-வது குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்த குடிநீர் திட்டத்தில் கோவில்பட்டி நகரில் பகிர்மான குழாய்கள் இன்னும் 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு பதிக்கப்படாமலும், 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் பணிகள் நிறைவு பெறாமலும் உள்ளது. எனவே குடிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

பஸ் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து, கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நகர தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், முன்னாள் நகரசபை கவுன்சிலர் தவமணி, மாவட்ட துணை தலைவர்கள் ரசாக், முத்துசாமி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாலகிருஷ்ணன், வக்கீல் கருப்பசாமி, வட்டார தலைவர்கள் ஆழ்வார்சாமி (மேற்கு), இம்மானுவேல் (கிழக்கு), மாவட்ட இளைஞர் அணி தலைவர் கனி, நகர துணை தலைவர் காளிபாண்டியன், வீரபுத்திரன், சுப்புராஜ், மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து, தங்களது காதுகளில் பூக்களைச் சுற்றியவாறு, காலி குடங்களை எடுத்து வந்து, நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்