சுவாமி சகஜானந்தா உருவ படத்தை சட்டமன்றத்தில் வைக்க வேண்டும் - தொல்.திருமாவளவன்
சுவாமி சகஜானந்தா உருவ படத்தை சட்டமன்றத்தில் வைக்க வேண்டும் என்று சிதம்பரத்தில் நடந்த விழாவில் தொல்.திருமாவளவன் பேசினார்.
புவனகிரி,
சுவாமி சகஜானந்தா தோற்றுவித்த நந்தனார் பள்ளியின் நூற்றாண்டு விழா சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் நடைபெற்றது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். புதுச்சேரி சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி, புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ. நீல.கங்காதரன், டாக்டர் சங்கரன், முன்னாள் துணைவேந்தர் சபாபதிமோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாலஅறவாழி, விழாக்குழு நிர்வாகி ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் கோ.நீதிவளவன் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் சுவாமி சகஜானந்தாவின் விழாமலர் வெளியிடப்பட்டது. விழாவில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-
சுவாமி சகஜானந்தா தாழ்த்தப்பட்ட ஏழை மக்கள் கல்வி பயிலும் வகையில் நந்தனார் பள்ளியை தொடங்கினார். சட்டசபை தந்தை என போற்றப்பட்ட சுவாமியின் உருவப்படத்தை தமிழக அரசு சட்டமன்றத்தில் வைக்கவேண்டும். சுவாமியின் கனவாக இருந்த நந்தனார் பள்ளிகள் நந்தனார் பல்கலைக்கழகமாக உருவாகவேண்டும். சுவாமி நினைவை போற்றும் வகையில் அவரது பெயரில் நாணயத்தையும், தபால் தலையையும் மத்தியஅரசு வெளியிட முன்வரவேண்டும். நந்தனார் பள்ளியின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக தமிழக அரசு எடுத்து நடத்தவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முன்னாள் மாணவர்களான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். தங்கராசு, மவுரியா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி செயலாளர்கள் செல்லப்பன், தாமரைச்செல்வன், நிர்வாகிகள் பெரு.திருவரசு, அழகியமணவாளன், சிவலிங்கம், இன்பவளவன், தாய்மன்சிற்றரசு, பெருசரித்திரன், தயாநிதி, ஆதிமூலம், பார்த்திபன், முகிலன், கிருபாநிதி உள்பட முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில் விழாக்குழு உறுப்பினர் எம்.கே. பாலா நன்றி கூறினார்.