கோவையில் மாயமான வாலிபர் கொன்று புதைப்பு? போலீஸ் தீவிர விசாரணை
கோவையில் மாயமான வாலிபர் கொன்று புதைக்கப்பட்டாரா? என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை ஒண்டிபுதூர், சூர்யா நகர் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவருடைய மகன் மணிகண்டன்(வயது 24). தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந்தேதி முதல் மணிகண்டனை காணவில்லை. அவரை தாயார் லட்சுமி மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தனர். கடந்த அக்டோபர் மாதம் 19-ந்தேதி மணிகண்டன் மாயமானது குறித்து வழக்குப்பதிவு செய்து அவரை போலீசாரும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் மணிகண்டனை ரவுடி கும்பல் கொலை செய்து புதைத்து இருக்கலாம்? என்று போலீசார் சந்தேகித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கோவை சவுரிபாளையம் பாலம் பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற கொலையில் கைதானவர்கள் தற்போது கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த கும்பலை சேர்ந்தவர்கள்தான் மணிகண்டனை கொன்று புதைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
மணிகண்டனை ஒரு கும்பல் கொன்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். மேலும், சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கைதிகளிடம் மணிகண்டன் சாவு குறித்து தீவிர விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். மாயமான மணிகண்டன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.