ரூ.6½ லட்சம் நகைகள் திருடிய வேலைக்காரர் உள்பட 2 பேர் கைது
ரியல் எஸ்டேட் ஏஜெண்டு வீட்டில் ரூ.6½ லட்சம் நகைகள் திருடிய வேலைக்காரர் உள்பட 2 பேரை ராஜஸ்தானில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
இந்த நகைகளை வீட்டு வேலைக்காரர் கோவிந்த் தனது நண்பர் பான்சி(25) என்பவருடன் சேர்ந்து திருடிவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதுபற்றி ஹேமந்த் ஜவோரி காம்தேவி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் வலைவீசி தேடிவந்தனர். இந்த நிலையில் இருவரும் ராஜஸ்தானில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்த நகைகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் மும்பை அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.