14,250 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கலெக்டர் கேசவன் தொடங்கி வைத்தார்
காரைக்கால் மாவட்டத்தில் 14,250 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதற்கான முகாமை கலெக்டர் கேசவன் தொடங்கிவைத்தார்.
காரைக்கால்,
புதுச்சேரி அரசு நலவழித்துறை சார்பில் காரைக்கால் மாவட்டத்தில் 2 கட்டங்களாக (ஜனவரி 28, மார்ச் 11) போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று காரைக்கால் மாவட்டம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
காரைக்கால் அரசு மருத்துவமனை மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிக்கூடங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் மாவட்டத்தின் எல்லை பகுதிகளில் இதற்காக மொத்தம் 70 மையங்கள் அமைக்கப்பட்டு சுமார் 14 ஆயிரத்து 252 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இப்பணியில் நலவழித்துறை ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், தன்னார்வலர்கள் என சுமார் 300 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.
காரைக்கால் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கேசவன் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் நலவழித்துறை துணை இயக்குனர் மோகன்ராஜ், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சித்ரா, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி உதயகுமார் மற்றும் நலவழித்துறை, மருத்துவமனை ஊழியர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.