கோத்தகிரி அருகே குடியிருப்புக்குள் புகுந்து நாயை தாக்கிய சிறுத்தைப்புலி
கோத்தகிரி அருகே குடியிருப்புக்குள் புகுந்து நாயை சிறுத்தைப்புலி தாக்கி உள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி கார்சிலி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலையோரம் உள்ள வீட்டில் மகேஷ் என்பவர் வசித்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் நுழைவு வாயில் கேட்டை பூட்டிவிட்டு தூங்க சென்றார். வீட்டின் முன்புறம் அவரது நாய் நின்றிருந்தது.
இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு நாய் குரைக்கும் சத்தத்தை கேட்டு மகேஷ் வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே எட்டி பார்த் தார். அப்போது சிறுத்தைப்புலி ஒன்று வீட்டிற்குள் புகுந்து நாயை தாக்கியது. பின்னர் அதை தூக்கி கொண்டு செல்ல முயன்றது. இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மகேஷ் வீட்டிற்கு வெளியே உள்ள விளக்குகளை எரிய விட்டார்.
வீட்டின் வெளியே விளக்குகள் எரிய ஆரம்பித்ததும் சிறுத்தைப்புலி நாயை போட்டு விட்டு அங்கிருந்து ஓடி விட்டது. குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தைப்புலி புகுந்ததை அறிந்து அக்கம், பக்கத்தினர் பீதி அடைந்தனர்.
படுகாயம் அடைந்த நாயை அவர் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
கடந்த ஒரு மாத காலமாக தங்கமலை பகுதியில் இருந்து கார்சிலி வழியாக கடைவீதி பகுதி வரை இரவு நேரங்களில் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் இருக்கிறது. இதனால் இங்குள்ள தேயிலை தொழிற்சாலைக்கு இரவு வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் தொழிலாளர்கள் பீதியுடன் உள்ளனர். தற்போது குடியிருப்புக்குள் நுழைந்து நாயை தாக்கி கொல்ல முயற்சித்து உள்ளது. இந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறும் முன் சிறுத்தைப்புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.