நீர்நிலை பகுதியில் குடியிருக்கும் 33 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா
வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி நீர்நிலை பகுதியில் குடியிருக்கும் 33 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்று மயிலாடுதுறை உதவி கலெக்டர் தேன்மொழி கூறினார்..
சீர்காழி,
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்டது விளக்குமுகத்தெரு. இந்த தெருவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடும்பத்தினர் அனைவரும் மழை காலங்களில் மழை நீரால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் விளக்குமுகத்தெருவில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் மழைநீர் சூழ்ந்தது. இதில் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் அமைச்சர் ஓ.எஸ். மணியன், நீர்நிலைகளில் குடியிருப்பவர்களுக்கு பட்டாவுடன் மாற்று இடம் வழங்கப்படும் என அறிவித்ததின்பேரில் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி அலுவலகத்தில், நீர்நிலை புறம்போக்கு பகுதியில் குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மயிலாடுதுறை உதவி கலெக்டர் தேன்மொழி தலைமை தாங்கினார். பாரதி எம்.எல்.ஏ., மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலதுறை அலுவலர் பாஸ்கரன், சீர்காழி தாசில்தார் பாலமுருகன், தனி தாசில்தார் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் பாரதிதாசன் வரவேற்றார்.
கூட்டத்தில் மயிலாடுதுறை உதவி கலெக்டர் கலந்து கொண்டு கூறுகையில், விளக்குமுகத்தெருவில் நீர்நிலைகளில் குடியிருக்கும் 33 குடும்பங்களுக்கு பேரூராட்சி பகுதியில் வீட்டுமனை பட்டாவுடன் நிரந்தர இடம் தேர்வு செய்து விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்களுக்கு வீடு கட்டி கொள்ள அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.கூட்டத்தில் அ.தி.மு.க.ஒன்றிய கழக செயலாளர் ராஜமாணிக்கம், பேரூர் கழக தலைவர் போகர்ரவி, கிராம நிர்வாக அலுவலர்கள் நவநீதன், வனஜா, பேரூராட்சி அலுவலர்கள் பாஸ்கரன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.