தூத்துக்குடி மாவட்டத்தில், போலியோ தடுப்பு சொட்டு மருந்து
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 1¼ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில், பிறந்த குழந்தைகள் முதல் 5 வயது வரை உள்ள 1 லட்சத்து 43 ஆயிரத்து 796 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்குவதற்கான முகாம் நேற்று நடந்தது.
இதற்காக துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆஸ்பத்திரி, மற்றும் அனைத்து ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் 1,194 மையங்கள் அமைக்கப்பட்டு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த மையங்களில் சுகாதாரத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் உள்பட சுமார் 5 ஆயிரத்து 589 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த முகாமில், மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுத்து முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன்லலிதா, சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் கீதாராணி, போஸ்கோராஜா, உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, உதவி அலுவலர் ஜெயபாண்டியன், குழந்தைகள் பிரிவு தலைவர் அருணாசலம், குழந்தைகள் பிரிவு தலைமை டாக்டர் பத்மநாபன், மகப்பேறு மருத்துவர் முத்துலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி நகரசபை பகுதியில் உள்ள 36 வார்டுகள் மற்றும் ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரி வளாகம் உள்ளிட்ட இடங்களில், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக 31 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
நேற்று காலை 7 மணிக்கு, போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியை, கோவில்பட்டி அண்ணா பஸ் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த சிறப்பு மையத்தில், நகரசபை ஆணையாளர் அட்சையா தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க செயலாளர் வெங்கடேஷ் கலந்து கொண்டார். இந்த சிறப்பு மையங்களில் டாக்டர்கள் உமாசெல்வின், நர்ஸரின்மா பாபு ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர், நகராட்சி சுகாதார பணியாளர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டு, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்கள். இந்த நகரசபை பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த 31 மையங்களில் 8 ஆயிரத்து 500 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.