திருவள்ளூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து
திருவள்ளூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 383 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி, ரெயில் நிலைய வளாகம், திருவள்ளூர் பஸ் நிலையம் போன்ற இடங்களில் நேற்று பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சார்பில் முதற்கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த இடங்களில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி கலந்து கொண்டு 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 5 வயதிற்கு உட்பட்ட 2 லட்சத்து 43 ஆயிரத்து 383 குழந்தைகளுக்கு 1,271 நிலையான மையங்கள், மக்கள் அதிகமாக கூடும் பஸ் நிலையம், ரெயில் நிலையம் போன்ற இடங்களில் 70 மையங்கள், 43 நடமாடும் மையங்கள் என்று மொத்தம் 1,384 முகாம்கள் மூலமாகவும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த முகாமில் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் தயாளன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜெ.பிரபாகரன், திருவள்ளூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ., திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் செந்தில்குமரன், திருவள்ளூர் சுகாதார அலுவலர் கோவிந்தராஜன், சுகாதாரப்பணிகள் மேலாளர் கிரிதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.