நெடுங்குளம் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நெடுங்குளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டியை அடுத்துள்ளது நெடுங்குளம். இந்த கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கிராம கமிட்டி சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சந்திரபிரபா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மேலும் நெடுங்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்தகொண்டு, வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை ஆர்வத்துடன் அடக்கினர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளாக டிவி, கட்டில், பீரோ, சைக்கிள், தங்கம் மற்றும் வெள்ளி காசுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கி பிரேம்குமார் என்பவர் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். விழாவில் வட்டாட்சியர் சரஸ்வதி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்தையா, கூட்டுறவு வங்கித்தலைவர் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக போட்டியில் காயம் அடைந்த வீரர்களின் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், 3 மருத்துவ குழுக்கள் வசதி செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ரவிச்சந்திரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த ஒரு வாலிபர் மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.