கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய தன்னாட்சி கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை
தன்னாட்சி கல்லூரி நிர்வாகங்கள் மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தன. அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–
மும்பை,
தன்னாட்சி கல்லூரிகள் தங்களின் கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய அனுமதி வழங்க வேண்டும். மாநில கட்டண நிர்ணய ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயம் செய்யும் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்பதில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க உத்தரவிடவேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷன் கவாய், கொலபவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘கட்டண நிர்ணயத்தில் தன்னாட்சி கல்லூரிகளுக்கு முழு சுதந்திரம் அளிப்பது அடிப்படையில் தவறான ஒன்றாகும்’’ என கூறி தன்னாட்சி கல்லூரி நிர்வாகங்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.