பயந்தர் ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரை அடித்து நொறுக்கிய திருடன்
பணம் இல்லாததால் பயந்தர் ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரை திருடன் ஒருவன் அடித்து நொறுக்கிய சம்பவம் நடந்துள்ளது.
மும்பை,
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர் உடனடியாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ரெயில்வே போலீசார் விரைந்து வந்து, டிக்கெட் கவுண்ட்டரில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், அதிகாலை நேரத்தில் திருடன் ஒருவன் டிக்கெட் கவுண்ட்டருக்குள் நுழையும் காட்சிகள் பதிவாகி இருந்தது. திருடன் முதலில் டிக்கெட் கவுண்ட்டரில் உள்ள பெட்டிகளில் பணம் ஏதும் உள்ளதா? என தேடுகிறான். ஆனால் அங்கு பணம் ஏதுமில்லை. இதனால் ஆத்திரமடைந்த திருடன் அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு, அங்கிருந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டிக்கெட் கவுண்ட்டரை உடைத்து சென்ற திருடனை வலைவீசி தேடிவருகின்றனர்.