அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
திருமானூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் அகிலா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) ஜெயராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இலந்தைகூடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் குமரவேல் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமையாசிரியை இன்பராணி தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். மேலும் திருமானூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, தனியார் பள்ளிகள் மற்றும் போலீஸ் நிலையங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
தா.பழூர் ஒன்றியம் அருள்மொழியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் சிற்றரசு தலைமை தாங்கினார். உதவி தொடக்கக்கல்வி அதிகாரி கலியபெருமாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கலைநிகழ்ச்சி மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உதவி தொடக்கக்கல்வி அதிகாரி பரிசு வழங்கினார். பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் தா.பழூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாண்டியன், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஆசிரியர் சிவசங்கரி நன்றி கூறினார்.
ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் சார்பு நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். இதில் வக்கீல்கள், பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஜெயங்கொண்டம் துணை சிறைச்சாலையில், தலைமையிடத்து துணை தாசில்தார் ரகுமான் கொடியேற்றி வைத்து கைதிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையிலும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தலிங்கம் தலைமையிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
இதேபோல் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் அண்ணாதுரை தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். இதில் ஆசிரிய-ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜீவ்காந்தி தலைமையிலும்,ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது.மேலும் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம், பள்ளி, கல்லூரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம், மோட்டார் வாகன ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
ஆண்டிமடம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் துணை வட்டாட்சியர் வேலுமணி தலைமையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதில் ஆண்டிமடம் வருவாய் ஆய்வாளர் பிரபு மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன் தலைமையிலும், வரதராஜன்பேட்டை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் உஷா தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி மரியதாஸ் தேசிய கொடியேற்றினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தாசில்தார் பாரதிவளவன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
ஆலத்தூர் தாலுகா கூடலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் உதவி தலைமையாசிரியர் செல்வராசு தலைமையில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பிச்சைப்பிள்ளை தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தெரணி அரசு உயர்நிலைப்பள்ளியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலியமூர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தங்கராசு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.