முன்விரோதத்தில் மோதல்: தாய்-மகனுக்கு வெட்டு ஒருவர் கைது

முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் தாய்-மகனுக்கு வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Update: 2018-01-27 22:45 GMT
ராயபுரம்,

சென்னை, தண்டையார் பேட்டை வ.உ.சி. நகர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன்(வயது32), இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த செல்லம் என்ற பெண்ணுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் செல்லத்துக்கும், கண்ணனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது செல்லத்துக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் வந்தார். இதில் ராஜாவுக்கும் கண்ணனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ராஜா தன்னிடம் இருந்த கத்தியால் கண்ணனை வெட்டியதாக தெரிகிறது. இதைதடுக்க வந்த கண்ணனின் தாய் தனக்கோட்டியையும் ராஜா வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த தாயும், மகனும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜாவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்