கயத்தாறு அருகே வீடு புகுந்து 10 பவுன் நகைகளை திருடிய இளம்பெண் கைது
கயத்தாறு அருகே வீடு புகுந்து 10 பவுன் நகைகளை திருடிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
கயத்தாறு,
கயத்தாறு அருகே வீடு புகுந்து 10 பவுன் நகைகளை திருடிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
விவசாயி
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஆத்திகுளம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சண்முகையா. விவசாயி. இவருடைய மனைவி குருவம்மாள் (வயது 49). இவர் கடந்த 25–ந் தேதி காலையில் தனது வீட்டின் கதவை சாத்தி வைத்து விட்டு, அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்றார். பின்னர் மதியம் அவர் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு, பீரோ திறந்து கிடந்தது. அவரது வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர் நைசாக வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முத்துமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த மருதய்யா மனைவி கன்னியம்மாள் (20), சண்முகையாவின் வீட்டுக்குள் புகுந்து நகைகளை திருடியதும், பின்னர் அதனை நெல்லையில் உள்ள நகைக்கடையில் விற்றதும் தெரியவந்தது.
இளம்பெண் கைது
இதையடுத்து கன்னியம்மாளை போலீசார் கைது செய்து, 10 பவுன் நகைகளையும் மீட்டனர். கைதான கன்னியம்மாள் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.