அறிவு சார்ந்து செயல்பட்டால் வாழ்க்கையில் தோல்வி வராது நீதிபதி பேச்சு
அறிவு சார்ந்து செயல்பட்டால் வாழ்க்கையில் நமக்கு தோல்வி வராது என்று கல்லூரி விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் பேசினார்.
திருப்பரங்குன்றம்,
மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் நேரு தலைமை தாங்கினார். செயலாளர் விஜயராகவன் வரவேற்றார். பொருளாளர் கோவிந்தராஜ், உதவி தலைவர் ராஜகோபால், சுயநிதி பிரிவு இயக்குனர் ராஜாகோவிந்தசாமி, உதவி செயலாளர் ராஜேந்திர பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பாரம்பரிய மிக்க நமது நாடு, கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிவு சார்ந்த விஷயங்களை வித்திட்டுள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே ஞானம் சார்ந்த ஆலயமாக விளங்கும் நாலந்த பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரம் மாணவர்களும், 2 ஆயிரம் ஆசிரியர்களும் தங்கி கல்வி பயின்றனர்.
அவர்கள் எல்லாவித பாடங்களையும் கற்றனர். இந்த பல்கலைகழகத்தில் தேர்வு கிடையாது. மதிப்பெண் கிடையாது. ஆனால் உலகில் உள்ள அனைத்து விஷயங்கள் குறித்து, எந்த ஒரு கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் சொல்லக் கூடிய ஞான ஆற்றல் அவர்களிடம் இருந்தது. மாணவர்களாகிய நீங்கள் யார் என்பது உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும். எதிர்காலத்தை நீங்களே தீர்மானிக்க வேண்டும்.
போட்டிகள் நிறைந்த வாழ்க்கைக்கு உங்களை இந்த சமூகம் தள்ளிக் கொண்டே போகிறது. சவால்கள் நிறைந்த இந்த உலகில் வென்று காட்ட வேண்டும். உணர்ச்சிபூர்வமாக செயல்படாதீர்கள். அறிவு சார்ந்து செயல்பட்டால், வாழக்கையில் நமக்கு தோல்வி வராது. உலகில் தலை சிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக மதிக்கப்படுபவர் ஜி.டி.நாயுடு. இவர் உழைப்பை மட்டும் அடிப்படையாக கொண்டவராக இருந்தார்.
இவரை போல ஒவ்வொரு நாளையும் கவனமாக பயன்படுத்த வேண்டும். மனதில் நல்ல எண்ணங்களை பதிய வேண்டும். எதை சார்ந்து சிந்திக்கிறீர்களோ அதன்படி தான் வாழ்க்கை அமையும். கால சக்கர ஒட்டத்திற்கு ஏற்ப செயல்பட்டால் சிறந்த மனிதர்களாக எழுந்து நிற்பீர்கள். பொருள் சார்ந்த வாழ்க்கை பயன் தராது. இவ்வாறு அவர் பேசினார்.