வேலூர் மாவட்டத்தில் 18 தாசில்தார்கள் இடமாற்றம்

வேலூர் மாவட்டத்தில் 18 தாசில்தார்களை இடமாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் ராமன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல் 11 துணை தாசில்தார்களும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2018-01-26 23:31 GMT
வேலூர்,:-

வேலூர் மாவட்டத்தில் 18 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் முழு விவரம் வருமாறு:-

பெங்களூரு-சென்னை விரைவுப்பாதை நில எடுப்பு தனி தாசில்தார் செல்வராஜ் வேலூர் வட்ட வழங்கல் அலுவலராகவும், வேலூர் வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றிய இளஞ்செழியன் வேலூர் அரசு கேபிள் டி.வி. நிறுவன துணை மேலாளராகவும், அங்கு பணியாற்றிய பழனி வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் பறக்கும்படை தனி தாசில்தாராக பணியாற்றிய சத்தியமூர்த்திக்கு பதிலாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சத்தியமூர்த்தி திருப்பத்தூர் தாசில்தாராகவும், அங்கிருந்த ஸ்ரீராம் பெங்களூரு-சென்னை விரைவுப்பாதை நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்திற்கும், அங்கு பணியாற்றிய ஜெய்குமார் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளராகவும், அங்கிருந்த குமரவேல் நெமிலி தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அங்கிருந்த முருகன் குடியாத்தம் நிலவரித்திட்டத்திற்கும், அங்கு பணியாற்றிய கோபி குடியாத்தம் தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல பெங்களூரு- சென்னை விரைவு பாதை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலகத்தில் பணியாற்றிய செண்பகவள்ளி, திருப்பத்தூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், அங்கிருந்த கிருஷ்ணவேணி வாணியம்பாடிக்கும், அங்கிருந்த முரளிகுமார் ஆம்பூர் சமூக பாதுகாப்பு திட்டத்திற்கும், அந்த பதவியிலிருந்த சாமுண்டீஸ்வரி அங்கேயே தாலுகா பொறுப்பு தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதுவரை அங்கு அந்த பணியில் பணியாற்றிய மீராபென்காந்தி அணைக்கட்டு சமூக பாதுகாப்பு திட்டத்திற்கும், அங்கிருந்த குமார் அதே இடத்தில் தாலுகா அலுவலக பொறுப்பு தாசில்தாராகவும், அங்கிருந்த மதிவாணன் பெங்களூரு- சென்னை விரைவுப்பாதை நில எடுப்பு சிறப்பு மாவட்ட அலுவலகத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் நாட்டறம்பள்ளி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியாற்றிய பிரபுகணேஷ் அங்கேயே தாலுகா பொறுப்பு தாசில்தாராகவும் அங்கிருந்த ரமேஷ் சிப்காட்- பனப்பாக்கம் (அரக்கோணம்) நில எடுப்பு தனித்துறை கலெக்டர் அலுவலகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் 11 துணை தாசில்தார்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டள்ளனர். அதன் விவரம் வருமாறு:

வேலூர் மண்டல துணை தாசில்தார் கீதா வேலூர் கலெக்டர் அலுவலக ‘எப்’ பிரிவு துணை தாசில்தாராகவும், வாணியம்பாடி தலைமையிடத்து துணை தாசில்தார் சுமதி பேரணாம்பட்டு தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், ஆம்பூர் தேர்தல் பிரிவு துணைதாசில்தார் அம்ருன்னிசா வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கண்காணிப்பாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கண்காணிப்பாளர் எம்.சசிகலா கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு துணை தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த துணை தாசில்தார் சரண்யா வேலூர் தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

வேலூர் மண்டல துணை தாசில்தார் ஆனந்தன், வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலக கண்காணிப்பாளராகவும், வாலாஜா மண்டல துணை தாசில்தார் வசந்தி ஆற்காடு மண்டல துணை தாசில்தாராகவும், ஆற்காடு மண்டல துணை தாசில்தார் புனிதவதி வாலாஜா மண்டல துணை தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

வாலாஜா மண்டல துணை தாசில்தார் கணேசன், வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலராகவும், அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலர் ராஜராஜசோழன் அங்கிருந்து குடியாத்தம் தாலுகா தேர்தல் பிரிவு தாசில்தாராகவும், திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் வள்ளியம்மாள், நாட்டறம்பள்ளி தாலுகா தேர்தல் பிரிவு தனித்துணை தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்