125 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் தயார் குமாரசாமி பேட்டி
சட்டசபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிடும் 125 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளதாக குமாரசாமி கூறினார்.
பெங்களூரு,
ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி முன்னிலையில் பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் பெலகாவி காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் அக்கட்சியில் சேர்ந்தனர். முன்னாள் மத்திய மந்திரி பாபாகவுடா பட்டீலும் அக்கட்சியில் சேர்ந்தார். அவர் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது மந்திரியாக பணியாற்றியவர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெலகாவியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் எங்கள் கட்சியில் சேர்ந்தனர். அடுத்து வரும் நாட்களில் பெலகாவியில் இன்னும் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும். இரண்டு தேசிய கட்சிகளின் தவறான கொள்கையால் பெலகாவி மக்கள் வெறுப்பில் உள்ளனர். இன்று(அதாவது நேற்று) எங்கள் கட்சியில் சேர்ந்த பிரமுகர்கள் எந்த பதவியையும் எதிர்பார்க்கவில்லை.
இதனால் பெலகாவியில் எங்கள் கட்சி மேலும் பலம் அடையும். சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பில் 125 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் தயாராக உள்ளது. அந்த 125 வேட்பாளர்களுடன் நான் ஆலோசனை நடத்தி இருக்கிறேன். கட்சியை பலப்படுத்துதல், காங்கிரஸ், பா.ஜனதா வியூகங்களை மீறி எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்து ஆலோசனை வழங்கினேன்.
தொகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் என்ன?, அந்த பிரச்சினைகளை தீர்க்க நமது கட்சி எடுத்து வைக்க வேண்டிய தீர்வுகள் குறித்து நான் ஆலோசனை கூறினேன். சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை விரைவில் அறிவிப்பேன். அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் நிற்க வைத்து இயற்கை வளங்களை பாதுகாக்க உறுதிமொழி ஏற்போம்.
காங்கிரஸ், பா.ஜனதா இரண்டு தேசிய கட்சிகளும் கர்நாடகத்தின் இயற்கை வளங்களை கொள்ளையடித்துவிட்டன. தேவேகவுடா பற்றி மந்திரி ஏ.மஞ்சு தவறாக பேசி இருக்கிறார். அவருக்கு கலாசாரம் தெரிந்திருந்தால், அவ்வாறு பேசி இருக்க மாட்டார். தேர்தலில் ஏ.மஞ்சுவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
தேசிய கட்சிகளுக்கு கர்நாடகத்தின் நலனில் அக்கறை இல்லை. மகதாயி நதி நீர் பிரச்சினைக்காக நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் மாநில அரசுக்கு பங்கு உள்ளது. ஆனால் இதில் அரசுக்கு தொடர்பு இல்லை என்று சித்தராமையா சொல்கிறார். முழு அடைப்புக்கு ஆதரவாக அரசு அலுவலகங்களை பூட்டிக் கொண்டனர்.
ஹாசன் மாவட்ட அரசியலில் நான் தலையிடவில்லை. நான் ராமநகரில் தான் அதிக கவனம் செலுத்துகிறேன். மகாமஸ்தகாபிஷேக விழாவுக்காக நடைபெற்ற வளர்ச்சி பணி நிதியில் முறைகேடு செய்ய கலெக்டர் ரோகிணி சிந்தூரி விடவில்லை. அதனால் தான் அவர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருப்பதை படித்தேன்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.