மத்திய தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் 391 பேர் கைது
நாமக்கல் மாவட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 5 இடங்களில் நடந்த சாலைமறியல் போராட்டத்தில் மத்திய தொழிற்சங்கத்தினர் 391 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல்,
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை முதலாளிகளுக்கு சாதகமாக திருத்தக்கூடாது. சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்சஊதியமாக மாதம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்துக்கு தொழிற்சங்க நிர்வாகிகள் பழனியப்பன், தனசேகரன், சிங்காரம், பழனிவேலு, பெரியசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணைத்தலைவர் தம்பிராஜா, சி.ஐ.டி.யு. மாவட்ட துணைச்செயலாளர் சிவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 47 பேரை, அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் கைது செய்தனர்.
இதே போல ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய இடங்களிலும் மத்திய தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் 5 இடங்களில் நடந்த இந்த சாலைமறியல் போராட்டத்தில் 100 பெண்கள் உள்பட தொழிற்சங்கத்தினர் 391 பேர் கைது செய்யப்பட்டனர்.